×

இந்தியாவில் இதுவரை 1,270 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு : அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 450 கேஸ்கள்!!

புதுடெல்லி:  இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’, குறுகிய நாட்களில் 100 நாடுகளில் பரவி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் ெதாற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1270 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் 23 மாநிலங்களில் ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 450 பேரும் டெல்லியில் 320 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிற மாநிலங்களின் ஓமிக்ரான் பாதிப்பு விவரம்:கேரளா  109தெலங்கானா 62குஜராத் 97ராஜஸ்தான் 69தமிழகம் 46கர்நாடகா  34ஆந்திர பிரதேசம் 16மத்தியப் பிரதேசம் 9,மேற்கு வங்கம் 11ஹரியானா 14ஒடிஷா 14ஜம்மு காஷ்மீர் 3உத்தரப்பிரதேசம் 2சண்டிகர் 3லடாக் 1உத்தரகாண்ட் 4ஹிமாச்சல் பிரதேசம் 1மணிப்பூர் -1,கோவா -1பஞ்சாப் -1அந்தமான் 2ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 374 பேர் குணமடைந்துள்ளனர்….

The post இந்தியாவில் இதுவரை 1,270 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு : அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 450 கேஸ்கள்!! appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Union Ministry of Health ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி